Monday, May 24, 2010

படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா !

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர்; கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறார்;.

துரம் 03ல் கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

தரம் 08ல் கற்கும் போதே கவிதையின் படிக்கட்டுக்களில் காலடி எடுத்து வைத்த இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் ~ காத்திருப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு, ஞானம், இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம், மற்றும் இணையத்தளங்களான www.vaarppu.com, www.youthfulvikatan.com பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com, போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.www.riznapoems.blogspot.com, www.riznastory.blogspot.com, www.poetrizna.blogspot.com ஆகிய தன்வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 20 - 26 வார சுடர் ஒளி பத்திரிகையில் வெளிவந்த உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 புரட்டாதி மாத செங்கதிர் சஞ்சிகையிலும் மற்றும் 2010ம் ஆண்டு பெப்ரவரி ஞானம் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன.

பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 2010 பெப்ரவரி 03ம் திகதியன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் பிரதித் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com) பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

பேய்களின் தேசம் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இவருடைய இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.

இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் Information & Communication Technology என்ற கற்கை நெறியைப் பூர்த்தி செய்து Diploma பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவி வானில் உலா வரும் இக் கவி வானில் உலா வரும் இக் கவிநிலாவுடன் தொடர்பு கொள்ள...

E-Mail- poetrizna@gmail.com

Thursday, May 14, 2009

பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் !

இராட்சசிப்பெண்னே!
நான் மட்டுமா?
நீயென்றெண்ணி
நான் அணைத்துத்துயிலும் தலையணை கூட
என் கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாசனாய் போனது!
என்னை விட்டு பிரிந்து செல்ல
தெரிந்த உனக்கேன்
கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?
சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்.....
நினைவுப் பொழுதுகளை......
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் போல.....!!!!

குழந்தை மனசுக்காரி !

இதயப்பாகம் பாறை வைத்தாற்
போல கணக்கிறது....
திரும்பும் திசை எங்கும் தீப்பிடித்த
பிணவாடை மணக்கிறது!
ஒரேயொரு முத்தத்தில் மொத்த
கவலையும் கழிந்து விடும் என்று
தப்புக்கணக்கு போடுகிறாயா...?
அல்லது
முற்று முழுசாய் அன்பை
வெளிப்படுத்த முடியவில்லையே என்று
இதயம் நீ வாடுகிறாயா?
உறவுகள் நெருக்கமாய் இருப்பதெல்லாம்
பிரிவுகளிருக்கும் வரை தானா..
இடைவெளி குறைந்து விட்டால்
அன்பிற்குள் இடைஞ்சல் வருமா?
விதி என்று வீராப்பு பேசினாலும்
சதி தானோ என்று
நினைக்கும் குழந்தை மனசுக்காரி நான்!!!

நட்டுவக்காலிகளின் ராச்சியம ;!

நட்பு எனும் நாடகத்தில்
நட்டுவக்காலிகளின் ராச்சியம்..
புனிதமிகு உறவாம்!
புழுவை வி;டவும் ஒன்றமில்லா
கேவலமான பூச்சியம்!
பதவி பணம் இருந்திட்டால்
பழகிடும் ~கண்ணே| என்று..
குறை அதில் கொஞ்சம் வந்தால்
குறி வைக்கும் பின்னே நின்று!
மனதுக்கு தர வேண்டுமல்லவா
ஆறுதல்...நடப்பதிங்கே அன்புக்கும்
வஞ்சம் செய்திடும் மாறுதல்!
இதயத்துள் தீ மூட்டி எரிக்கும்...பின்
இருப்பவரை கோள் மூட்டி பிரிக்கும்!
அறிவில்லா தலைகள் பகரும்
பால் போன்ற உறவிது என்று..
அநுபவ உள்ளங்கள் அறியும்
பாலல்ல கள் இது என்று!
துன்பங்களை கொட்டி விட்டால்
பலர் முன்னால் வெட்டி விடும!;
கவலை போக்க இந்த களங்கம் எதற்கு?
இருக்கிறதே இருட்டும் தனிமையும்
துணையாய் அதற்கு!!!!