Tuesday, September 15, 2009

காணாமல் போன கவிதை...சிறுகதை

நிஸ்தார் நானா கேட்டை திறந்து வெளியே வந்து பார்த்தார். எறும்புக்குட்டங்களாய் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. இந்த நிமிடத்தில் அவசரமாக பாதையைக் கடக்க வேண்டும் என்றால் உயிரைத் தான் விட வேண்டியிருக்கும்.

~~என்ன யோசிக்கிறீங்க... வாங்க சாப்பிடலாம்

சொல்லிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்.

~~புள்ளையள் ரெண்டு பேரும் டியூஷன் பொயிட்டாங்களா?

~~ம்ம்... சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டேன்... வாங்க நாம சாப்பிடலாம் என கூற அவரும் வீட்டுக்குள் வந்தார்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

அவருக்கு முப்பத்தியிரண்டு வயதிருக்கும். என்றாலும் இருபத்தியாறு வயது போலத் தான் தோற்றம். காது மடலருகே எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை பின்புறமாக சீவி விட்டால் வாலிபன் தான் நிஸ்தார் நானா. மனைவி ரயீஸா மட்டும் என்னவாம். இரட்டைக் குழந்தைகளின் தாயார் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்? இயற்கை இவர்களிடம் அதீத பாசம் கொண்டு இளமையை வாரி வழங்குகிறதா என்றே எண்ணத் தோன்றும்.

நிஸ்தார் நானா ஆசிரியர் நியமனம் பெற்று எட்டு வருடங்களிருக்கும். அவரது வாழ்வில் அடி தண்டிப்பு கோபம் என்றெல்லாம் மாணவர்களிடம் வெளிக்காட்டியதேயில்லை. ~~அன்பும் பாசமும் தான் ஒருவனை நல்லவனாக்கும் என்று எப்போதோ அனுபவம் மூலம் அறிந்தவர். உயர்வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் இவர் தான் பெஸ்ட் பிரண்ட். மனசு விட்டுப் பேசி மாணவர்களின் குறை நிறைகளை அறிந்து உதவுவார். அவர்களுடனிருக்கும் போது தன் இளமை நினைவுகளில் மாறிப்போவார்.

~~என்ன சேர்..அந்தக்கால யோசினை வந்திட்டா? குறும்புக்கார மாணவன் கேட்க,

~~ஓமோம். ரோமியோ ஜுலியட் காலம். போய் திருக்குறள் பாடமாக்கு. நாளைக்கு பரீட்சை என ஆதரவாக கூறி அனுப்பினார்.

அவன் கேட்டதும் சரி தானே?

எவ்வளவு வசந்தமான காலங்கள் அவை?

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

ஆசிரிய பயிற்சிக் கலாசாலை... அங்கு தானே அவருக்கு மறக்க முடியாத காலம். ஸீனியர் மாணவர்க்ள எல்லாம் இவரை பாடச்சொல்லி அதட்டினார்களே?

~~ரேக்கிங் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார் தான். ஆனால் இப்படியுமா?

பாடசாலைக் காலத்தில் எந்தவித வம்புதும்புக்கும் போகாதவர் இவர்களிடம் மிரண்டு தான் போனார்.

~~ப்ரதர் எனக்கு பாட வராதே

~~என்னடா பாக்குற பாடன்னு சொல்றேனில்ல.. மீண்டும் அதட்டல்கள்.

~~பாடவா ஓஓர் பாஆஆடலை..... குரல் நடுங்கியது நிஸ்தார் நானாவுக்கு.

ஸீனியர் மாணவர்கள் எல்லாம் குடல் வெளியே தெரியுமளவுக்கு சிரித்தார்கள். பாடலை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியதற்காக பாராட்டினார்கள். பின்பு அவர்கள் அனைவரும் நண்பர்களாகி வாழ்க்கையை அனுபவித்ததெல்லாம் மனசில் பதிந்த இனிப்புகள் அல்லவா?

~~டேய் மச்சான் சூப்பர் ஃபிகர்டா..வா போய் பார்க்கலாம்

ஸீனியர் மாணவன் கூப்பிட்டும் போகாவிட்டால் என்ன நடக்கும் என்று முழு பல்கலைக்கழக வளாகமும் அறியும். ஆதலால் குட்டி போட்ட பூனை போல நிஸ்தார் நானாவும் சென்றார்.
போய் அந்தப் பெண்ணைப் பார்த்தவர்.....


ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ



பாடசாலை விடுவதற்பாக மணி ஒலித்தது. தன் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் அரை மணி நேரத்துக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தார். சாப்பிட்டு விட்டு வந்தவருக்கு மனைவி நீட்டிய பானத்தில் பார்வை நிலை குத்தியது. அதனூடே மீண்டும் அந்தப் பெண் அவரது புலன்களுடே வந்து சலனமூட்டிhள்.

அப்படித்தான். ஒருநாள் சிற்றுண்டிச்சாலைக்கு நுழைந்து தொண்டை வரை சாப்பிட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு குரல்..

~~அங்கிள் கொக் ஒன்னு ப்ளீஸ்..

திருமியவருக்கு வியப்பு. என்ன அழகான குரல். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவரை நோக்கி நெருங்கிக் கொண்டு வந்தாள்.

பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தார். இல்லை. அவருக்கு மின்னலடித்தது. அவர் கைகளில் கோக்கா கோலாவை தந்து விட்டுப் போனாள்.

அவரது மனசை ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் குடைய ஆரம்பித்தன. அடுத்த நாள் காலை சற்று லேட்டாகி எழுந்தவர் தனக்குத்தானே ~~கனவு முழுவதும் கன்னியவள் வருகை என்றார்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

அட கவிதை கூட வருமோ, கண்களை சிமிட்டிய படி ரயீஸா வர, வெலவெலத்துப் போனார் நிஸ்தார் நானா.

~~ காப்பி பொடி தீர்ந்துடிச்சி. வாங்கிக்கிட்டு லைப்ரரியில புள்ளயள் நிப்பாங்க. அழச்சிக்கிட்டு வந்துடுங்க

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

லைப்ரரி!

அது கூட நெஞ்சிலிருந்து அகலவில்லை.

எதை மறக்க நினைக்கிறோமோ அது தான் அடிக்கடி நினைவில் வந்து போகும் என்று எங்கோ வாசித்த வரிகள் அவருக்கு ஞாபகம் வந்தது.

எத்தனை முறை அவளிடம் பேசவென்று முயற்சித்திருப்பார். ஒரு பார்வை... ஒரு புன்னகை...

இதையே பார்த்து எவ்வளவு நாள் சீவிப்பது? மனம் திறந்து ஒரு வார்த்தை??

ஆம்! பேசக்கிடைத்தது. ஆனால் நான்கு மாதங்கள் கழிந்து ஒரு கலைவிழாவின் போது தான்.

அவள் கவிதை சொல்வதற்காக மேடை ஏறிய போது பலத்த கரகோஷம். கவிதையே கவிதை சொல்கிறதா? என்று வியந்தார்.

அதை சாட்டாக வைத்து பாராட்னார் அவளும் சிரித்தாள்.

நாளிராவுடனான அவரது பார்வை மற்ற ஆண்களிலிருந்தும் வித்தியாசப்படுவதை உணர்ந்தாள் நளீரா. அவரது காதல் மனம் அவளுக்கு விளங்கியது.

அதன் பிறகு பயிற்சிக்கலாசாலையிலிருந்து அவர் பாடசாலைக்கு மாறினார். இதன் போது தன் தந்தையின் உத்தரவுக்கிணங்க நளீரா போவது கட்டாயமானது.

சந்திப்புகள் யாவும் வுங்சனை ஆனதால் கண்ணீருக்கு கைகளை அணையாக்கிப் பார்த்தார்கள். முடியாமல் போகவே பிரிவு என்பது உண்மை என உணர்ந்தார்கள். அவர்களது எதிர்கால கனவுக் கோட்டையை காற்று அடித்துச் சென்று காணாமலாக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

ஊருக்குச் சென்ற நாளிராவின் தொடர்பு திடீரென்று குறைய மலை உன்று இடம் பெயர்ந்து தன் நெஞ்சில் இருப்பதை உணர்ந்தார். உண்மையாக காதலித்தவர்களுக்கு காத்திருப்பதில் தானாம் சுகம் அதிகம். ஆனால் மானசீகமாக காலித்த நிஸ்தார் நானாவுக்கு பொறுமை என்பது பொய்யாகிப் போனது. எனவே அவர் அவளைப் பார்க்கவென்று புறப்பட்டார்.

ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் நாளிரா அவரை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறாள் என்றோ அல்லது பெண்களே பேய் என்றோ பிதற்றித் திரிந்திருக்கலாம். ஆனால்....

இதோ அவள் பாதி நிர்வாணத்துடன் பிணமாக கிடந்ததாக ஊரார் பேசிக் கொகின்றார்களே. இதைக் கேட்கத்தான் ஓடி வந்தாரா? சிறுவயதிலிருந்தே நாயிராவுடன் ஒன்றாக விளையாடிய இனிய நண்பனா இப்பயான கொடுமையைச் செய்தவன்? மூர்ச்சித்து விழுந்தார் நிஸ்தார் நானா.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

இன்றும் அவர் நினைவுகளில் நாளிரா வந்து போவதுண்டு. நாளிராவை மறந்த கயவராக அவர் இல்லை. அதே போல நாளிராவை நினைத்துக் கொண்டு ரயீஸாவுக்கு துரோகமும் செய்யவில்லை. அவரைப் பொறுத்தவரையில் நாளிராவை மறக்க முடியாது ஏனெனில் அந்த நாளிரா...அவரது காணாமல் போன கவிதை!!!

(நிறைவு)

Monday, September 14, 2009

காதல் வரம்...சிறுகதை



கால்களை நீட்டி சோபாவில் சாய்ந்திருந்தார் சுபா டீச்சர். அவரது சிந்தனைகள் யாவும் பத்து வருஷம் பின்னோக்கியதாய் இருந்தது. ஆம். அவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆகியும் பத்து வருஷங்கள் தான். தன்னால் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார்.

இந்த தவிப்பிற்குக் காரணம் என்ன? ஓ வைஷ்னவி தான். அவள் படிப்பில் கெட்டிக்காரி. அவளது பரீட்சைப் புள்ளிகள் பல தடவை சுபாவை குளிர்வித்திருக்கின்றன. வைஷியை உதாரணம் காட்டி எத்தனை பிள்ளைகளை ஊக்குவித்திருப்பார் சுபா டீச்சர்?

இன்று காலை சுபா டீச்சர் வங்கிக்குச் சென்றிருந்தார். கியூவில் வருமாறு இருந்த அறிவித்தல் எரிச்சலைத் தந்தது. அதன் பிரதிபலிப்பாக அங்குமிங்கும் பார்த்தவருக்கு அதோ அந்த ஜன்னலினூடாக வைஷி தென்பட்டாள். முதலில் யாரென்று அனுமானிக்க முடியாமல் குழம்பினாலும் தீவிரமாக யோசித்ததில் ஆசிரிய மூளை சட்டென்று இனம் கண்டு கொண்டது. சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பாடசாலை பருவத்தில் துருதுரு என்று இருந்த வைஷி தற்போது களையே இல்லாமல் கறுத்து சிறுத்து இருந்தது தான். அதையும் விட பல்கலைக்கழகம் போக வேண்டும் என்ற அவளது சதா ப்ரார்த்திப்பு??


ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

~~என்ன டிச்சர். பெல் அடிச்சி பத்து நிமிஷம் ஆயிட்டுது- வகுப்புத் தலைவியாயில்லாத போதும் வைஷி வந்து கூப்பிட்டாள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருந்த சுபா டிச்சருக்கு அளவில்லா ஆனந்தம்.

~~படிப்பில் எத்தனை ஆர்வம் இந்தப் பிள்ளைக்கு? கட்டாயம் நல்ல நிலைக்கு வருவா

மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார் டிச்சர். ஆசிரியர்களின் ப்ரார்த்தனை தட்டுப்படுவதில்லையே? இப்போதும் கூட நல்ல ஸ்தானத்திலிருந்து தான் கடமை புரிகிறாள். என்pனும் சுபா டிச்சருக்குத் தான் திருப்தி பட்டுக் கொள்ள முடியவில்லை.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

அவர் அப்படி கியூவில் நின்ற போது வைஷியும் அவரைக் கண்டிருக்க வேண்டும். பியூன் வந்து உள்ளே வருமாறு கூற சுபா ஆச்சரியமடைந்து பின் நிதானித்து உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் வைஷி எழுந்து நிற்க

~~ம்ம் பண்பாடு மாறாத பிள்ளை. இப்போதும் என்ன கண்டிட்டு எழுந்து நிண்டிட்டுது- வாழ்த்தினார் டிச்சர்.

அவர் வந்த காரணத்தைக் கேட்டு உடனே செய்து கொடுத்ததுடன் அவரது முகவரியையும் வாங்கி தனக்கு லீவு கிடைக்கும் போது வந்து போவதாகவும் கூறினாள். நன்றியுடன் விடைபெற்று வந்த டிச்சரை குறை கூறியவர்களாக கியூவில் இருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைஷி சுபா வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சுபாவின் வாழ்க்கை, கணவன், பிள்ளைகள் பற்றி வினவினாள். எதிர்பாராத இக்கேள்வியினால் திக்குமுக்காடிப் போனார் டீச்சர். அவரது முகமாற்றம் வைஷியின் மனதை என்னவோ செய்தது. செய்யக்கூடாத பெரிய தப்பை செய்து விட்டதாக கருதி தடுமாறினாள். அதை உணர்ந்த சுபா

~~அவர்கள் யாரும் எனக்கில்லைம்மா என்றார்.

இந்த ஒற்றை பதிலில் அதிர்ந்த வைஷி

~~ஏன் எல்லோரும் எங்கே? வெளியூரிலா அல்லது நாடிருந்த நிலையில் யுத்தத்துக்கு இரையாகி...

இதைக் கேட்க நினைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் வைஷி பற்றி ஆராய்ந்த போது அவள் பாதாளம் நோக்கிப் போவதை உணர்ந்து கொண்டார் டிச்சர். அது பாதாளமா? பூபாளமா? யாருக்குத் தெரியும்?

~~நீ இன்னமும் அவனைக் காதலிக்கிறியா?

~~இல்லை டிச்சர்- உண்மையாகவே பொய்யைச் சொன்னாள்.

ராகுலின் அப்பா வைஷியின் ஏழ்மை காரணமாகவே அவளை எதிர்ப்பதாக அறிந்த போது கோபம் தலைக்கு உச்சியில் ஏறியது சுபா டிச்சருக்கு. ராகுலின் அப்பாவுடன் தான் பேசுவதாக தைரியப்படுத்தினார்.

வைஷியின் காதலாவது வாழட்டுமே?

சுபாவின் காதல் தான் பட்டமரமாய் போயிற்றே. அதை வைஷியிடம் வெளிப்படையாக கூற முடியுமா? குருசிஷ்ய உறவுக்கு பாதிப்பு என்பதை விட சுபாவுக்கு ஒரு மகளிருந்தால் ஏறக்குறைய வைஷியின் வயது தான் இருந்திருக்கும். அப்படியென்றால் மகளிடமே தன் காதல் தோல்வியை கூறுவது போல் ஆகிவிடாதா? அது அநாகரிகம் அல்லவா? வைஷி நாவலொன்றை பார்த்திருக்க, சுபா டிச்சர் இளமைக்கால நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தார.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

~~சுபா என்னைப் பாரேன் ப்ளீஸ்

~~......................

~~சொல்றத புரிஞ்சிக்க..உன்ன கலியாணம் செஞ்சா சீதனம் தர மாட்டியள் என்டு அப்பா சொல்றவர். மலேசியாவில் இருக்கும் அப்பாவின் பிரண்டின்ர மகளை யோசிக்கினம். அதனால..

~~அதனால

அவர் குனிந்த தலை நிமிரவில்லை. அவரைப்பிடித்து உலுக்கிக் கேட்டதில் இனி அவர் தனக்கு சொந்தமில்லை என்பதை சுபா புரிந்து கொண்டாள்.

இறைவா!

கனவில் அவருடன் வாழ்ந்து, பிள்ளைக் குட்டிகள் பெற்று...

ஒரே வார்த்தையில் வாழ்க்கையைச் சீரழித்து விட்டாரே? காதலிக்கும் போது பெற்றோரைக் கேட்கிறார்களா? குதிரைக்கு பசித்தால் வைக்கோலையும் திண்ணும் என்பது எவ்வளவு நிதர்சனம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் பசித்தாலும் புல் திண்ணாத புலி போல் மனம் மாறமாட்டார் என்று தானே சுபா ஆழமாக நம்பியிருந்தாள்?

அதே நிலை தானா வைஷ்ணவிக்கும்?

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

சத்தியமாக வைஷி நாவலை படித்துக் கொண்டிருக்க வில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பாவம் அவளின் ஏழை பெற்றோர். வறுமை காரணமாக ராகுலின் அப்பாவிடம் பேசவே தயங்கினார்கள்.

டிச்சர் ராகுலில் வீட்டாரிடம் சென்று தனக்காக பரிந்து பேசுவதை வைஷி விரும்பவில்லை. காரணம் சுபா டீச்சரும் ஏழை மனுஷி என்பதால் தான். அழகு, குணம், மார்க்கம் இருந்து என்ன பயன்? பணத்துக்கு முன் அவை எல்லாமே மண்டியிட்டு காணாமல் போகின்றனவே?

அவற்றைக் கண்டு வைஷியினதோ, ராகுலினதோ காதல் நெஞ்சங்கள் மசியவில்லை. அவனும் தன் அப்hவுடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டு தான் இருந்தான். அவர்கள் தம் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டார்கள். அப்படியென்றால் இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுவிட்டு ஓடுமளவுக்கு வலிமையைத் தந்தது எது? காதல் புனிதமானதா? தீய சக்தியா? உண்மையாக காதலிக்கும் அனைவரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்குத் தான் வைஷியும் முகம் கொடுத்திருந்தாள்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

சுபா டிச்சர் கதவைத் தட்டினார். இருபததேழு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான வாலிபன் கதவைத்திறந்து பார்த்து புருவத்தை சுருக்கினான். அவனைப் பார்த்த டிச்சருக்கு முள்ளுக்குத்தியது போல் இருந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?

அப்போது ~~ராகுல் ஹ{ இஸ் தெயார்? (ராகுல் யாரங்கே?) என்று கம்பீரமாக ஒலித்த குரலும் டீச்சரை தடுமாறச் செய்தது. அந்த உருவம் அவர்களை நெருங்க நெருங்க டிச்சரின் மனமும் மூளையும் ஒருமித்தே விளித்துக் கொண்டன.

அடக்கடவுளே!

பால் வாங்க பாம்பிடமா வந்திருக்கிறேன்?

இவன் ராகுலை எங்கும் பார்க்கவில்லை. இதோ இவரில் தான். மனசு ஓலமிட்டு அலறியது. அவரும் டிச்சரை அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பாரா? வந்த வேகம் குறைந்து பணிந்து போய்... இல்லையில்லை கூனிக்குறுகிப் போய் நின்றிருந்தார்.

~~டாடி இவங்களைத் தெரியுமா- இது ராகுல்

~~இல்..ஓம்..இல்லை.. தடுமாறினார் ராகுலின் தந்தை.

~~தெரியாதுப்பா. ஆனா உன்னப்பத்தி பேசத்தான் வந்தருக்கேன் என்றார் டிச்சர்.

ராகுலுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சுடர்விட்டு எரிந்த டிச்சரின் நம்பிக்கைத்தீ ராகுலின் தந்தையைப் பார்த்ததும் அணைந்தே போயிற்று. இருக்காதா பின்னே? அவன் அப்பன் தன்னைப் போலவே ராகுலையும் மாற்றி விட்டால்..?

நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட கதிரையில் சாய்ந்து மௌனம் காத்தார் ஐங்கரன்.

ஐங்கரன்!

ம்ம் சுபாவின் காதலர், இன்னொரு முறையில் சொன்னால் ராகுலின் அப்பா.

எதை எப்படி சொல்வது என தவித்து, பின் நிதானித்து வைஷியைப் பற்றி கூறி முடித்த போது ராகுல் மொத்தமாய் உடைந்திருந்தான்.

தன் மகளுக்கு ராகுலைக் கேட்டு வந்திருக்கிறாளா சுபா... என்ன நீனைத்தாரோ ~~செய்திடலாம் என்றார்.

அப்பாடா. வந்த காரியம் இனிமையாக முடிந்ததே. கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினார் டிச்சர்.

இன்னும் இரண்டே மாதங்களில் திருமணம்!

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

~~அம்மா! இவங்க தான் எங்கள் விஞ்ஞான பாட டீச்சர்......என்று வைஷி தன் ஏழைத் தாயிடம் கூறிக் கொள்ள அவள் சுபா டிச்சரைப் பார்த்து கைகூப்பினாள்.

அவளது விழிகளில் தான் எத்தனை நன்றிப்பெருக்கும், சந்தோஷமும்!

இக்காட்சியைக் கண்ட ஐங்கரனுக்கு கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விட்டது போல் இருந்தது.

~~இவள்..இவள் சுபாவின் மகளில்லையா? ஐயோ தன் மகள் என்று சுபா என்னிடம் கூறவில்லை தானே? நான் எப்படி கற்பனை பண்ணி.... சுபாவைக் கண்டதும் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டேனா? - தவித்த ஐங்கரன் சுபாவை அழைத்து விபரம் கேட்டார்.

~~உங்களைத் தவிர வேறொருத்தன என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல்லீங்க. நான் இன்னமும் கல்யாணமே பண்ணிக்கல. வைஷி என் பொண்ணுன்னு உங்ககிட்ட சொல்லலியே..ம்ம் என்ன நல்ல குணமான மருமகப் பொண்ணு கிடைச்சிருக்கா. பயம் வேணா. ராகுலை சந்தோஷமா வச்சிக்குவா. ஐயோ கெட்டிமேளம் சொல்றாங்க. வாங்க போகலாம்.

சுபா நகர அப்படியே சுவரில் சாய்ந்து விட்டார் ஐங்கரன். காதலர் பிரிந்தாலும் சுபாவின் காதல் அழியவில்லை.

அங்கே வைஷியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்!!!

(நிறைவு)

Saturday, September 12, 2009

தவிப்பு....சிறுகதை


~~ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட் பொய்க் கோபத்துடன் ஷாமிலா கேட்டாள்.
~~இல்ல செல்லம். ஒபிஸ்ல சரியான பிஸிடா. அது தான்; என்று கூறிக் கொண்டே அவளிடம் குனிந்தான்.

இரு வீட்டாராலும் தம் காதலுக்கு எதிர்ப்பிருந்த போதும், பொறுத்திருந்து..பெற்றோரின் சம்மதத்துடனேயே தன் இனிய காதலியைக் கைப்பற்றியவனல்லவா அஸ்வின்! இன்றைக்கு மூன்று வருடங்கள் கடந்தும் யாரும் அவர்களை தம்பதியராய் நோக்க மாட்டார்கள். காரணம் இவர்களுக்கிடையே காணப்பட்ட இரக்கமும் நெருக்கமும் தான்.

~~என் அஸ்வின் ரொம்ப நல்லவன்

இப்படித்தான் தன் கணவனைப்பற்றி நேற்று வரை பெருமை பட்டுக்கொண்டிருந்தாள் ஷாமிலா.

ஆனால் இன்று..திருஷ்டி பட்டதைப்போல...

இறைவனே ஏனிந்த சோகம்?

அஸ்வின் அப்படிப்பட்டவன் என்று யார் தான் நினைத்தார்கள்? இல்லை. அவன் அப்படிப்பட்டவனில்லை என்று ஆறுதலடைய அவளால் முடியவில்லையே?

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

நித்யா!

இந்த மனக்குமுறலுக்கெல்லாம் காரணம் நித்யா என்பவளுக்கு அஸ்வின் எழுதியிருந்த கடிதம் தானே? பீரோவைத் திறக்கையில் வந்து விழுந்த பைலிலிருந்து தானே அஸ்வின் பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்தக்கடிதம் இவளுக்குக் கிடைத்தது.

தன் கற்பனையை ஓட விட்டுப் பொருமினாள். வயிற்றெரிச்சலாயிருந்தது. சாப்பிடப்பிடிக்கவில்லை. குளிக்கவுமில்லை. தன் மணவாழ்வின் இதுவரையும் செய்திராத ஒன்று இன்று அரங்கேறியது.

ஆம். குப்புறப்படுத்து அழுதாள் ஷாமிலா.

பொழுது சாயும் நேரம் மிகவும் களைத்துப் போய் வந்த அஸ்வின், புன்னகையால் தன் களைப்பைப் போக்கும் ஷாமிலா எங்கே என கண்களால் வீடு முழுக்க தடவினான். பளிச்சென அவன் முகம் மிளிர்ந்தது.

~~ஓ..முடு வந்து விட்டது போல தனக்குத்தானே கூறிக்கொண்டவன் உற்சாகத்துடன் படுக்கை அறையை நெருங்க நெருங்கத் தான் பயம் கௌவிக் கொண்டது.

குப்புறப்படுத்து விம்மிக் கொண்டிருந்த ஷாமிலாவின் நெற்றியில் கைவைத்துப்பார்த்து பதறினான். அல்லாஹ்வே..இப்படி கொதிக்குதே..என்று கலவரப்பட்டான்.

பதறிக் கொண்டிருந்தவனை மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் ஷாமிலா.

~~என் மேல் தான் எவ்வளவு அன்பு என்ற எண்ணம் தோன்றி மறையும் முன்பே ~~சீ..என்னமாய் நடிக்கிறான் ராஸ்கல் என்று எண்ணி அவனது கையை விலக்கி விட்டு விருட்டென எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.

எல்லாமே புதிதாக இருந்தது அஸ்வினுக்கு. பசியோடு அமர்ந்திருந்தவனுக்கு ஷாமிலாவின் திடீர் மாற்றத்தை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


அவளை முதன் முதலில் சந்தித்தது ஒரு விபத்தில் தான். அதுவும் அவனது காரிலேயே! செல்போனில் சுவாரசியமாக உரையாடிக் கொண்டு வந்தவள் மஞ்சட்கடவையில் அல்லாமல் பாதையைக் கடக்க முற்பட்டாள்.

க்ரீச்!
மறுநிமிடம் இமைகளால் விழிகளை மூடிக்கொண்டாள். சொல்லி வைத்தாட் போல பொலீஸ் சூழ்ந்து கொண்டது. பொலீஸ் அதிகாரி இவனை ஜீப்பில் ஏறச் சொன்னார். பெண்கள் தவறு செய்தாலும் ஆண்களின் தலையில் தானே விடிகிறது என்று நினைத்துக் கொண்டவன் தன் விதியை நொந்தவாறு வேறு வழியின்றி ஜீப்பில் ஏறிக் கொண்டான்.

மூன்று நாட்கள் கழிய இன்னும் இரண்டு மணித்தியாலம் இருந்தது. அப்போது

~~உங்கள விட்டாச்சி..வீட்டுக்குப் போகலாம் என்று கான்ஸ்டபிள் சிங்களத்தில் கர்ஜித்தான். வெளியே வந்த போது ஷாமிலா அவனுக்காக காத்திருந்தாள்.

என்ன நினைத்தானோ அவளிடம் மன்னிப்புக் கேட்டான் அஸ்வின்.
தவறு செய்தவள் அவள். அவனை மன்னிப்பதா?

~~இல்ல மிஸ்டர்........ அவள் தடுமாறிய போது
~~அஸ்வின் என்று முடித்து வைத்தான்.

~~நீங்க தான் என்னை மன்னிக்கணும். நான் தான் பிழை செய்தேன்

~~எப்படியோங்க...உங்களால் அவர்களுக்கு செமலாபம் என்று கூறி சிரித்தான். அந்த சிரிப்பில் அவள் சொக்கிப் போனாள்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

ட்ரிங்..ட்ரிங்...

சுய நினைவுக்கு வந்த அஸ்வின் ரிஸீவரைக் காதுக்குக் கொடுத்தான்.

~~ஹலோ யாரு நித்தியா..சொல்லு. ஓகே வர ட்ரை பண்ணுறேன் பேசிக்கொண்டிருந்தான்.

மீண்டும் நித்தியாவா? எத்தனை நாளா நடக்குது இந்த நாடகம்..குளித்துக் கொண்டிருந்தவள் குரூரமாய் சபித்தாள். அஸ்வினுடைய நினைவுகளோ தான் ஷாமிலாவைக் காதலித்த காலங்களை அசை போட ஆரம்பித்தது.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

கம்பனியில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவளைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் ரொம்ப அழகாய் இருப்பதாய் கூறினார்கள். பார்ப்போமே என்று அலட்சியமாய் வந்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மனசு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. புன்னகை ஒன்றை மட்டும் அன்று பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு நாள் தன் உம்மாவுக்கு சுகமில்லை என்று ஷாமிலா வராதிருந்த ஒரு நாளின் போதே..தான் ஷாமிலாவுக்குரியவன் என்பதை அஸ்வின் தெரிந்து கொண்டான். பின்பு அவர்கள் தத்தமது இதயங்களை பரிமாறியதும்....அவள் வீட்டில் தோன்றிய எதிர்ப்பலைகள் அஸ்வினின் நடத்தை கண்டு ஓய்ந்ததும், ஷாமிலாவின் குணம் கண்டு அஸ்வினின் பெற்றோருக்கு அவளை பிடித்துப் போனதும் பழைய ஆனால் இனிய கதை.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

குளியலறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். டவலுடன் வந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளை ரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. மிதித்து விட்டது போல் சென்றாளே..

எழுந்து சென்று பாதி எழுதி விடடு வைத்திருந்த ~~அந்த கடிதத்தை எழுதத்தொடங்கினான்.
எதேச்சையாக வந்தவள் அவன் பின்னாலிருந்து அவன் எழுதுவதை வாசிக்கத் தொடங்கினாள்.

அதில்

~~...........................நித்தி..ஸொரிடா. உன் ரூமில் வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை.....
இப்படி தொடர்ந்து எழுதி நிறைவு செய்தான்.

அன்றைய இரவு இருவருக்கும் நரகத்துக்கு இட்டுச் சென்ற பாலமாக இருந்தது. எனினும் ஷாமிலாவின் நெஞ்சம் பாறையாய் இறுகியிருந்தது. ஸொரி ~~டா வாமே..அந்தளவுக்கு நெருக்கமோ...அழுகை வந்தது. ஆனால் அழவில்லை. துரோகிகளுக்காக அவள் ஏன் அழ வேண்டும்? அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. ரூமில் போய் பார்க்க முடியவில்லையாம். நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. உலகமே ஒன்றிணைந்து தனக்கு சதி செய்வது போல் உணர்ந்தாள்.

சற்று திரும்பியவளின் கண்களுக்கு அஸ்வினின் புகைப்படம் தென்பட்டது. இந்த..இந்த சிரிப்பில் தானே அவளது கன்னி மனம் பறிப்போனது. அவனின் சிரிப்பழகை ரசிக்கவென்றே எத்தனை ஜோக்குகளை தேடிச் சொன்னாள்? திடீரென அது ஆள்மயக்கிச் சிரிப்பு போல் தோன்றியது.

~~எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அந்த மாதிரி பொறுக்கிகளை மரத்தில கட்டி வச்சி சுடணும். பிறகு கழுகு கொத்தணும்...

என்று கணவனால் ஏமாற்றப்பட்ட தன் தூரத்து உறவினர் ஒருத்தி சொல்லியிருந்தாள். அது நடந்து அரை ஆண்டுகள் கழிந்திருக்கும். ஆனால் இப்போது ஷாமிலா சொல்லிப் பார்த்த போதும் பொருந்துகிறதே..!

தான் பார்த்துப் பார்த்து காதலித்தவள்..மணம் முடித்து இன்று வரை தேனாய் தித்திப்பூட்டியவள் இப்படி சீறுகிறாள் என்றால், தன்னில் ஏதாவது பிழையிருக்குமோ என் மூளையைக் கசக்கி யோசித்தான் அஸ்வின். ம்ஹ{ம்..அப்படி சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. எதற்காகவாவது சற்று உரத்துப் பேசினாலும் சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு பிறகு அதற்குத் தண்டனையாக முத்தம் கேட்பாள். இன்று என்னவாகிற்று?

தமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவு பற்றி ஈரேழு வாரங்களாக அவள் எதுவுமே கூறாததில் குழம்பிப் போனான் அஸ்வின். எங்காவது போய் வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. அவளிடம் சொல்லாமலேயே டவுனுக்குச் சென்றான்.
~~ஷமி...நீ நடந்நுக் கொள்றது கொஞ்சமும் பிடிக்கல.... அவன் சொல்லி விட்டு திரும்pப் பார்த்த போது அவள் அங்கிருந்தால் தானே? முதன் முதலாக அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.

நித்தி!
ஷாமிலா சொல்லிப் பார்ததாள். எரிச்சலாக இருந்தது. சற்று நேரத்தில் குமட்டிக் கொண்டு வர காரணமறிந்து பூரித்துப் போனாள். ஆனால் அந்த சந்தோஷம் வெகுநேரம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட எண்ணிக் கொண்டிருந்தவள் இப்போது விக்கிக் கொண்டு அழுதாள். தான் மோசம் போனதாய் தனக்குள்ளே கற்பனை பண்ணி மனம் சோர்ந்து போனாள்.

மாலை நேரம் அஸ்வின் தன் நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்தான். அவனை இதுவரை ஷாமிலா கண்டதில்லை. அவர்கள் தத்தமது அலுவலக வேலையில் முழ்கிப் போயிருந்தார்கள். வந்தவர்களுக்கு ஒரு கப் டீயாவது கொடுக்காவிட்டால் நல்லாயிருக்ககாது என்று அவளுக்குத் தெரியும். எனவே நாகரீகம் கருதி தேநீர் தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றாள். அவர்கள் பேசுவது அவள் காதுகளுக்கு கேட்டது.

இடையில் அஸ்வின் சொன்னான்..

~~ உன் ரூமுக்கு வர நினைச்சன்டா நித்தி;. ஆனால் கொஞ்சம் வேலையா இருந்தது.. உன் இனிஷியல் என்னானு சொல்லு. பயோடேட்டாவை டைப் பண்ணிடலாம்?

அதற்கு அந்த மற்றவன் கூறினான்...

~~உன் லெட்டர் கிடைச்சதுல சந்தோஷம்டா. நீ வருவன்னு நினச்சன்..பட். பரவாயில்ல .என் முழுப்பெயர் எஸ். ஏ. நித்தியானந்தன்..

ஓகே மிஸ்டர் நித்தியானந்தன். கண்களில் குறும்புடன் அஸ்வின் கூறினான்.


ஓ..~~நித்தியா னந்தன்!

ஷாமிலாவுக்கு எல்லாம் புரிந்தது. இவனுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் அப்படி குதித்திருக்கிறாள்..அஸ்வினைப் பற்றி தவறாக நினைத்ததை எண்ணி மனசு வலித்தது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டு டீயும் வடையும் கொடுத்த போது அஸ்வின் மெதுவாக அவளை ஏறிட்டான். அவனுக்கு எக்ஸ்ட்ராவாக ரொமான்ஸ் புன்னகையும் கொடுத்தாள். ஏதோ சொல்ல நினைத்த நித்தி அதைக் கண்டு புரிந்தவனான சொல்ல வந்தததை சொல்லாமலேயே விடைப் பெற்றுச் சென்றான்.

வெட்கத்தில் மிரண்டவள் தான் தாய்மை அடைந்த விடயத்தைக் கூறினாள். பிறகு தன்னுடன் சில நாட்களாக கோபம் காட்டியது ஏன் என்று அவன் கேட்ட போது அசடு வழிய காரணத்தைக் கூறினாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. இப்போது அந்த சிரிப்பில் கள்ளம் இருக்கவி;லை.

அவனைக் கட்டியணைத்தாள் ஷாமிலா.

இப்படி ஒருவருக்கொருவர் அணைத்து மகிழ்ந்து எத்தனை நாட்களாகி விட்டன?

~~ஏய் விடு குளிச்சிட்டு வர்ரேன் என்றான் அஸ்வின்.

அவனை விடாமலேயே ~~வேணாம் சேர்ந்து குளிக்கலாம் என்றாள்

வெட்கம் விட்டு கூறியவளை தவிக்க விடாமல் அவனும் அணைத்துக் கொண்டான்!!!

(நிறைவு)

Friday, September 11, 2009

கண்ணீர் தீயாகிறது.... சிறுகதை

காலை ஏழு மணியிருந்திருக்கும். அனாஸ{க்கு வயிற்றுக்குள் என்னவோ செய்தது. தேனீர் கோப்பையை வைத்து விட்டு எழுந்து மலசலகூடம் செல்ல நினைத்தான். நினைக்கத்தான் முடிந்ததே தவிர போவதற்கு முடியவில்லை. ஏனெனில் கொழும்பில் பிரபலமான அந்தக்கடையில் சிற்றூழியர்களாய் வேலை செய்யும் இவன் போன்று ஆறு பேர், இவனுடன் இந்த அறையில் தான் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் நேரகாலத்துடன் எழுந்திருந்ததால் அவர்கள் வரும் வரை காத்துக்கிடக்க வேண்டிய கட்டாயத்தில் படுத்திருந்தான்.

மலசலகூடம் என்றால் அறையோடு இருக்கும் அட்டேச் பாத்ரூம் என்றோ, சகல வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்றோ எண்ணினால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. மெதுவாக எழுந்து சோம்பல் முறித்த அனாஸ் காலைக் கடன்களை முடிக்க ஆயத்தமாகி பாத்ரூம் பக்கம் சென்றான். வசதியான இடத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவது பெரும் வேதனையாக இருந்தது. கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ளலாம் என்று பாயில் வந்து சாய்ந்து கொண்டான்.

மனசைக் கல்லாக்கி;க் கொண்டு இவனைப் போலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். சிலர் தம் மனைவி மக்களைப் பார்க்கவிருக்கும் ஆசையை வெளிப்படையாக கவலையுடன் கூறுவதை பல முறை கேட்டிருக்கிறான். வருடத்தில் இரண்டு தடவைகள் போய், நான்கு நாட்கள் இருந்து விட்டு வருவார்கள். சிலநேரம் போய் இரண்டு நாட்கள் ஆகும் போதே கடையில் வேலை இருப்பதால் வருமாறும், வராவிட்டால் சம்பளம் வெட்டப்படும் என்றும் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுவதுண்டு.

இந்த வேலையை வீசி விட்டுப் போவதென்றாலும் முடியவில்லை. வறுமை அவர்களை கட்டிப் போட்டிருந்தது. வேலை தேடுவதென்பது இலகுவான காரியமல்லவே. ச்சீ என்ன வாழ்க்கை..இரண்டு மூன்று வருடங்ளாக இதே போல் அடிமையாக..!

உடம்புக்கு முடியாமல் படுத்திருந்தாலும் சம்பளம் வெட்டுவார்கள். சாப்பாட்டுக்கு போய் வர நேரமாகினாலும் சம்பளம் வெட்டுவார்கள்..இப்படியே நடந்தால் ஊழியர்களுக்கென்று என்ன மிஞ்சப் போகிறது?

முதலாளி என்றால்..இஷ்டப்பட்ட நேரத்துக்கு வீட்டுக்குப் போகலாம். சாப்பிடலாம். தூங்கலாம். ஏன் அதிகாரவர்க்கம் என்பதனாலா? அவர்கள் மட்டும் தான் மனிதர்களா? தமது மனைவி பிள்ளைகளுடன் இரண்டு மாதங்களுக்கொரு முறை சுற்றுலா போவார்கள். ஆனால் கடையில் வேலை பார்க்கும் சிற்றூழியர்கள் ஞாயிறு தினங்களிலும் வேலை செய்து முதலாளிக்கு உழைத்துக் கொடுத்தாலும் ஓரிரு நாளாவது அதிகமாக லீவு எடுத்து பிள்ளைகளுடன் இருந்து விட்டு வர முடியாது. என்னவொரு கொடுமை!

அனாஸ் பரவாயில்லை. தனிக்கட்டை. எனினும் ஆசாபாசங்கள் உள்ளவன் தானே. சிலருக்கு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து அவர்களது தேவைகளைக் கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது. மனைவிமார் ஒவ்வொரு விடயம் பற்றியும் விம்மலுக்கும் விசும்பலுக்கும் இடையே அறியத்தரும் போது எவ்வளவு கவலைப்படுவார்கள் இந்த ஊழியர்கள்? அப்படி அவர்கள் கவலைப்பட்டு ஒடிந்து போயிருக்கும் நேரங்களிலெல்லாம் இவனது நினைவலைகள் வீட்டைச் சுற்றியும் எட்டு மாதங்களுக்கு முன்பு ஹலீமாவைச் சுற்றியுமே ஆரத்தழுவி ஆர்ப்பாட்டம் போடும்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
வாப்பா!
கண்டிப்பு, கோபம், அன்பு எல்லாவற்றுக்கும் உறைவிடமானவர். வாப்பா மீது அனாஸ{க்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆனால் ஏழைகளை மதிக்காத அவர் குணம் மட்டும் அனாஸ{க்கு பிடிக்காது.

உம்மாவைப்பற்றி கேட்க வேண்டுமா? சிறு தலைவலிக்கும் என்னமாய் துடித்துப் போவார்? உம்மா ரொம்ப அழகானவரும் கூட. ஆனால் ரோஷக்காரி. அடிக்கடி வாப்பாவுடன் சண்டையிடுவாள். அவர்களை புரிந்து கொள்ளவே முடியாது. என்ன இவர்கள்? எதற்காகவாவது சண்டை பிடிக்கிறார்கள்..ஆஸ்ஊஸ் என்கிறார்கள். இரவில் சமரசம்...காலையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இப்படி அனாஸ் நினைத்த போது அவனுக்கு ஆறு வயதிருந்திருக்கும். முதலில் புரியவில்லை. அவன் இளைஞனாகும் போது தான் அன்பின் ஊடுறுவலும் அதன் தாற்பரியமும் புரிந்தது. திருமணம் பற்றி புரியுமளவுக்கு அவனுக்கு படிப்பிருக்கவில்லையா அல்லது அவை மேல் பிடிப்பிருக்கவில்லையோ தெரியாது. ஆனால் ஹலீமாவை காணும் போது வாப்பாவின் பணக்கார குணம் தெரிந்தும்; அனாஸின் மனம் ஹலீமாவை நாடியது.

~~உன் புள்ள செய்திருக்கிற வேலய பாத்தியா? புள்ளய பெத்திருக்காளாம்..புள்ள!||
ஆவேசமாக வாப்பா காட்டுக்கத்தல் கத்திய போது

~~ஏன்ட அல்லாவே|| என்று நடுங்கியவாறு ஓடி வந்தார் உம்மா.

~~போயும் போயும் ஒரு ஏழையனோட பழகுறான் கழுதை. இவனை இப்படியே விட்டால் நாசமாப் போவான்|| என்றார் அதே தோரணையுடன்.

பெற்ற தாயிடமே தன் பிள்ளை நாசமாப் போகும் என்று கணவனே கூறினாலும் தாயுள்ளம் தாங்குமா? வாப்பாவுடன் மல்லுக்கு நின்றாள். வாப்பா ஏழை என்று குறிப்பிட்டது ஹலீமாவின் தம்பியான றியாஸைத் தான் என்பது தெரிந்த போது சுருக் என்றது. அடிக்கடி றியாஸ{டன் பேசும் போதெல்லாம் பள்ளி ட்ரஸ்டி யாராவது கண்டு வாப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள்.

என்ன மனிதர்கள்? படைத்தவனுடைய இல்லாங்களிலேயே பதவி வகித்துக் கொண்டு அல்லாஹ்வின் படைப்பினங்களை அவமதிக்கிறார்களே..

ஹலீமாவை தன் மனைவியாக்கிக் கொள்ளவென்று தான் கட்டிய கனவுக் கோட்டைகள் படிப்படியாக சரியத் தொடங்கிற்று. காரணம் பாழாய்ப் போன அவளது வறுமை.

அழகையும், அறிவையும் அவளுக்கு அள்ளி வழங்கிய இறைவன், ஏன் அவளை ஏழையாக உற்பவித்தான்?

~~ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒவ்வொரு சோதனை உண்டு. எனது உம்மத்தாருக்கு சோதனை செல்வம் தான்…

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை யாருமே படித்துணர்ந்ததில்லையா?. ஏழை எளிய மக்களின் உணர்வுகளைப் புரியாமல் அவர்களிடம் வேலை வாங்குவதும், தொழுவதற்கு கூட அவகாசமளிக்காமல் மிருகங்களாய் நடாத்துவதும்.....

ஏன்? வாப்பாவும் அப்படித் தானே நடந்து கொள்கிறார் என்று நினைவு வரும் போது நெஞ்சுக்குள் நோவெடுக்கும். மனித சமுதாயத்துக்குள் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை தோற்றுவித்த அந்த தீய சக்தி எது? அந்த பூதம் இப்போது எங்கு போய் ஒழிந்து கொண்டது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைத் தேடியே அலுத்துப் போயிருக்கிறான்.
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

அனாஸின் வாப்பா இரண்டொரு மாதங்களாய் மிகவும் பதட்ட நிலையில் இருந்தார். அடிக்கடி கோபப்பட்டார். சில நேரம் வழமைக்கு மாறாக பள்ளிவாசலில் அதிக நேரம் தங்கினார். அல்லாஹ{த்தஆலா அவரைச் சோதித்தான். அவர் தனது வியாபாரத்தில் நஷ்டமடைந்து கொண்டிருந்தார். இறைச்சிக்கறியும் மாசிச்சம்பலும் வெறும் நெத்திலிகளாய் மாறிப் போயின. முதலில் வீட்டார் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. வாப்பா இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தததை கண்டறியாதவன் அனாஸ். அவர் தற்போது மனதளவில் உடைந்து போயிருந்ததாலும் வயதாகியிருந்ததாலும் அனாஸின் தலை மீது குடும்பப் பொறுப்பு வந்து விழுந்தது.

எனவே பத்திரகை ஒன்றில் விளம்பரம் பார்த்து கொழும்பில் பிரபலமான ஒரு கடைக்கு வேலைக்குப் போகவிருப்பதாய் வீட்டில் தெரிவித்தான். உம்மா ஓ... வென்று கதறியழுதார். தம்பி தங்கையரும் தான். வாப்பா வலது கையால் இடது நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்து விட்டார்.

~~பொஸ்… எனும் அந்தஸ்து மகனை போக விடக்கூடாது என்று தடுத்தாலும் வயிற்றுப்பசி அந்த வரட்டுப் பிடிவாதத்தை விரட்டியடித்தது. போதாக்குறைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் நோன்பு வந்தது. நோன்பு வந்தால் பணக்காரர்கள் வீட்டில் எப்படியெல்லாம் விசேஷங்கள் இருக்கும். நோன்புக்கஞ்சி, பெட்டிஸ், ரோல்ஸ், பாலூதா.......இந்த ஓரிரண்டு வருடங்களாக் அனாஸின் வீட்டில் அப்படியிருக்க சந்தர்ப்பமில்லை. நோன்பு திறப்பதற்காக பள்ளிக்கு வருவோரை தரக்குறைவாக பேசும் வாப்பாவும் சிலநேரம் பள்ளிவாசலுக்கே போயிருக்கக்கூடும்.


ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


புனிதமிகு ஐவேளைத் தொழுகையைக்கூட நேரத்துக்கு தொழ முடியாமல்; இப்படி அடிமைத் தனமாக நடாத்தப்படும் என்றும்;, வெறும் சோற்றையும் பருப்புக்கறியையும் வீட்டார்கள் உண்ண நேரிடும் என்று அனாஸ{க்கு யாராவது சொல்லி இருந்தால் கருவிலேயே கலைந்து போயிருப்பான். உம்மாவின் வயிற்றிலிருந்து கொண்டு அவருக்கு உதைத்தற்கு தண்டனைதானோ இது என்று பல சந்தர்ப்பங்களில் எண்ணுவதுண்டு.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் தெஹிவளை சந்தியில் வைத்து றியாஸைக் கண்டு கதைத்தான் அனாஸ். அவன் தன் சகோதரியான ஹலீமாவைப்பற்றிக் கேட்ட போது சிறிது நேரம் மௌனம் காத்தான் றியாஸ்.

ஆம். அவள் மணமுடித்து விட்டாளாம். மனசு விம்மியது. வாப்பா மட்டும் சம்மதித்து இருந்தால்...அன்றே ஹலீமா தனதாகியிருக்கக் கூடும். வறுமையைக் காரணம் காட்டி அவனுடைய சந்தோஷங்களைத் தீயிட்டாரே. இப்போது நாமும் ஏழைகள் தானே..யாஅல்லாஹ்!

~~நீ போனதற்கு பிறகு உங்க வாப்பா ரொம்பவே உடைஞ்சு போயிட்டார். உம்மாவுக்கும் டயபெட்டிக்..சில நேரம் என் ஆட்டோவில் உங்க வாப்பாவும் உம்மாவும் ஹொஸ்பிட்டலுக்கு போவாங்க...உங்க வாப்பா இப்ப ரொம்ப பாசமா எங்களோட நடந்துக்குறாரு…

றியாஸ் கூறிக்கொண்டு போனான். ஆனால் அனாஸின் மனது வெட்டுப்பட்ட பாம்பு கிடந்து துடிப்பதைப் போல துடித்தது. என்ன செய்ய? கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.

தனக்கு இப்போது முப்பத்திரெண்டு வயதாகிறது. அது வரை ஹலீமா இருப்பதும் நியாயமில்லை தானே. வாப்பா திருந்தியதை நினைத்த போது சந்தோஷம் இல்லாமலும் இல்லை.


ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

முதலாளி வர்க்கம் மட்டும் நன்றாக இருந்தால் அன்றாட ஜீவனோபாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றுப்பாடு என்னவாகும். பல்வேறு மேடைகளில் அதிதியாயிருந்தவர்கள் இப்போதெல்லாம் எப்படி வறுமை பட்டிருக்கிறார்கள்?

வறுமை என்ற ஒரே காரணத்துக்காக கணவன்களைப் பிரிந்து வெளிநாடு செல்லும் எத்தனை மனைவிமார்கள்? அங்கு தமது கற்புக்கு கூட பாதுகாப்பில்லாத நிலையில் திண்டாடுவதை எத்தனை பேர் தைரியமாக வெளியிலோ அல்லது கணவரிடமோ கூறுகிறார்கள்? பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளையும் வெளிநாடுகளில் விட்டுவிட்டு மனநோயாளியாகியிருக்கும் எத்தனை வயோதிப பெற்றோர்?

நம் நாட்டில் இருக்கும் செல்வச் சீமான்கள் எல்லோரும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்கள் சிறுமைப்பட்டு இப்படி சீரழியத் தேவையிருக்காதே. ஊருக்கு காட்டுவதற்காக ஸகாத் கொடுக்கிறோம் என்று மார்தட்டி வெறும் இரண்டாயிரமோ, ஐயாயிரமோ கொடுத்து விட்டு அதையும் ஊரறியச் செய்து பெருமைப் படுபவர்கள், நாளை மறுமையில் என்ன சொல்லி அல்லாஹ்விடம் தப்பப்போகிறார்கள்? பணக்காரர்களுக்கு மாத்திரம் இப்தார் விருந்தும் வலீமா விருந்தும் கொடுக்கும் சில ~~வள்ளல்கள் உற்றார் உறவினரை மதிக்காமல் என்ன சாதனை செய்வதாய் நினைத்துக் கொள்கிறார்கள்?

தன் சொந்த சகோதரியினதோ, சகோதரினனிதோ கன்னிப்பெண்கள் சீதனக் கொடுமையால் பிழியப்பட்டு திருமணத்துக்காக காத்திருக்க, அதற்கு உதவாமல் வெறும் வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு ஏழெட்டு முறை ஹஜ் செய்பவர்கள் ~~ஹாஜியார் பட்டத்தைத் தவிர வேறு எதைப் பெறப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லையா?

~~நாமெல்லாம்; மறுமையில் ஹாஜியார்களாக மதிக்கப்படுவோமா அல்லது ஹாஜி யார்? என்று கேட்கப்படுவோமா என்று அவர்கள் பயப்படுவதில்லையா? மனிதனை ஏமாற்றும் இந்தப் போலி உலகத்தை நம்பி நிரந்தரமான மறுமைக்காக உழைக்காத, உழைக்க விடாத எத்தனை மனித ஜென்மங்கள்? என்று பலவாறு சிந்தித்து களைத்துப் போனான் அனாஸ்.

எப்படியெல்லாம் வசதியாய் வாழ்ந்தவன்...இப்போது மா மூட்டை தூக்க வேண்டும். இரவு பதினொரு பன்னிரெண்டு மணி வரை கடையில் வேலை செய்ய வேண்டும். உணவைப்பற்றி சொல்லத் தேவையில்லை.. உப்புமிரக்காது. புளியுமிருக்காது. பொறுமையாளர்களுடன் தானே அல்லாஹ் இருக்கிறான். எனவே சலித்துக் கொள்ளாமல் மிகவும் பொறுமையாக இருந்தான். இந்த பெருநாளைக்காவது ஊருக்குப் போய் வாப்பா உம்மாவுடன் சேர்ந்து சாப்பிடணும்....அவர்களுக்கு சந்தோஷம் தருமளவுக்கு தம்பி, தங்கையருக்கும் உட்பட புது ஆடைகள் கொண்டு போக வேண்டும். எப்போதோ வரவிருக்கும் பெருநாளை எண்ணி இப்படி இன்னும் இன்னும் என்னெனனவோ சிந்தனைகள் அவன் உள்ளத்தில் அலை மோதின.

~~என்னடா கனவு காணுறியா என கேட்டவாறு முதலாளி இடியப்பத்தால் நிறைந்த வயிறைத் தடவிய படி ரூமுக்கே வந்து கேட்டார். திடுக்கிட்டு எழுந்த அனாஸ் மெதுவாக நழுவி கடைக்குச் செல்ல ஆயத்தமானான். அவனது கன்னத்தில் கண்ணீர் கோடிட்டது. அது அவனுக்கு நெருப்பு போல சுட்டது. அவன் அடிக்கடி இப்படி கண்ணீர் சொரிவதுண்டு. அதனால் அவனுடைய கவலைகள் சுக்கு நூறாகிறதோ என்னவோ? அவனது தேனீர் கோப்பையில் ஈயொன்று விழுந்து இறந்திருந்தது.

(நிறைவு)

Wednesday, July 29, 2009

ஓயாத நினைவலைகள்


என் உள்ளம் உள்ளுர அழுது கொண்டது

இத்தனை வருடங்களுக்குப் பிறகு டீச்சரை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். இன்று லீவு போடுமாறு கணவருக்கும் சொல்லி விட்டு உம்மாவையும் அழைத்துக்கொண்டு டீச்சரைப் பார்க்க புறப்பட்டோம்.

ஆனால்.......

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.....

எப்படியிருந்த டீச்சர்? இன்று இப்படி உருக்குலைந்து...??

பாடசாலை வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் போதெல்லாம் இந்த நசீமா டீச்சரின் ஞாபகம் வரத் தவறியதேயில்லை. ஏனோ அவர் மீது அளப்பரிய அன்பு எனக்கு. சின்ன வயதில் நான் படு சுட்டியாக இருந்தேன் என்று அடிக்கடி என் உம்மா கூறி சிரிப்பதுண்டு. டீச்சரும் என் குறும்புத் தனங்களை கூறி ~இவள் ரொம்ப பெரியாளா வரணும்| என்று துஆ கேட்டதும் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.உம்மாவின் உயிர்த் தோழியான ஆதிலா மாமியை விடவும் நசீமா டீச்சரை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.
............. ............... ................... ............... ................

நசீமா டீச்சர்!

நான் முதலாம் ஆண்டுக்கு செல்லும் போதே அவர் அங்கிருந்தார். எங்கள் ~பெரிய சேரின்| மனைவி தான் அவர். சேருக்கும் என் மீது ப்ரியம் அதிகம். மொண்டசரி போகும் போதும் உம்மா அந்த பாடசாலைக்கு என்னை கூட்டிச் சென்றிருப்பதால் பெரிய சேரை நானும் அறிந்திருந்தேன். அவர் எனக்கு சொக்கலேட் தராத நாட்களில் அவருடன் பேசாமல் வந்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு தான் வருகிறது.

அன்றும் அப்படித்தான். சேருடன் கதைத்துக் கொண்டிருந்த போது டீச்சர் வர,

~டீச்சர் கொஞ்சம் வெளியில போங்க சேருடன் தனியா பேசணும்;| என்றேன்.


கோபம் வந்திருக்காது தானே? சிரித்து விட்டு பேசாமல் பைலை பார்த்துக் கொண்டிருந்தார் டீச்சர். எனக்கோ கோபம் தலையுச்சிக்கு ஏறியது. மேசைக்கு முன்னால் சவாரசியமாக என் கதைகளை கேட்டுக் கொண்டிருந்த பெரிய சேரிடம்,


~சேர் இவங்கள வெளிய போக சொல்லுங்க| என முறையிட்டேன்.


சேரும் என்ன நினைத்தாரோ ~நசீமா டீச்சர் கொஞ்சம் அங்கால போங்க| என்று கதவிருந்த பக்கத்தை காட்டினார்.


எனக்கோ கொள்ளை சந்தோஷம். மழலை மொழியில் மிச்ச மீதியிருந்த கதைகளை சொல்லி விட்டு உம்மா படித்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்புக்கு ஓடி விட்டேன்.


அன்றிலிருந்து டீச்சர் என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொள்வார். பல கதைகள் சொல்லித் தருவார். சக ஆசிரியைகளின் பிள்ளைகளுடன் அதிகம் பழகாத டீச்சர் ; வீட்டில் செய்து கொண்டு வரும் சிற்றுண்டிகளையும் தனிப்பட்ட முறையில் எனக்கு தருவார். ஸ்டாப் ரூமில் அனைத்து ஆசிரியைகளும் சாப்பிடும் போது என்னையும் உம்மா கூப்பிட்டுக் கொள்வார்.அப்போதும் நான் நசீமா டீச்சர்; செய்து கொண்டு வந்த உணவுகளையே விரும்பி சாப்பிடுவதுண்டு.


கொஞ்சம் என் சுட்டித் தனங்கள் குறைந்தது தெரிந்த போது தான் உம்மா டீச்சரின் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அங்கு அவரது இரண்டு மகன் மார்; இருந்தார்கள். நளீர் நானா மீது தான் நான் அதிகமாக இரக்கம் வைத்திருந்தேன்.அவர் என்னை விட இரண்டு வயது மூத்தவர். பழகுவதற்கு இனிமையானவர் .மற்றவர் காமில். அதிகம் பேச மாட்டார். கழுவும் மீனில் நழுவும் மீனைப் போல சிரித்;;;;;;;தும் சிரிக்காமலும் சென்று விடுவார்.


; உம்மாவுக்கு அப்போது என் தம்பி பிறந்திருக்கவில்லை. அதனால் ஆண் பிள்ளையின் கனவை டீச்சரின் மகன் மாரிடம் நனவாக்கிக் கொண்டிருந்தார் உம்மா. டீச்சருக்கு பெண் பிள்ளைகள் இல்லை. நான் தான் நானா மார் இருவருக்கும் தங்கை என கூறி மகிழ்வார்.


ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது டீச்சர் பென்ஷன் போயிருக்க வேண்டும். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சி;த்தியடைந்தவுடனேயே வேறு பாடசாலைக்கு போய் விட்டேன். அதன் பிறகு விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது டீச்சரின் தரிசனம் பெறாமல் போவதில்லை. நானும் சிறுமி என்ற ஸ்தானத்திலிருந்து ஒரு படி உயர்ந்திருந்ததால் எனக்கும் பெரிய சேருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி இருந்தது.


என் உம்மாவுக்கோ டீச்சருக்கோ நானும் நானாhமாரும் முன் போல் பழகுவதில் சங்கடங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் வாலிப வயதுடையவர்கள் என்பதால் எம்மிடையே வேரூன்றப் பட்ட சகோதர உறவு கூட ஒரு சிரிப்புடன் மாத்திரம் மட்டுப்பட்டு விட்டது..


காலச் சக்கரம் வேகமாக சுழன்றது. சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஊருக் வந்திருந்த போது நளீர் நானா வேலை கிடைத்து கொழும்புக்கு போயிருப்பதாய் சொன்னார்கள். காமில் ஏ எல் செய்து கொண்டிருந்தார். எனக்கு நல்ல வரன் அமைய வேண்டு;ம என்று தினமும் அல்லாஹ்விடம் வேண்டுவதாக டீச்சர் சொல்லும் போதெல்லாம் என் காதோரம் சிவத்துப் போகும்.

............. .................. .............


நானும் தற்போது திருமணம் செய்;து தலை நகரம் வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. என் திருமணத்துக்கும் டீச்சர் வரவில்லை;. ~என்னை பார்க்க வராமல் ஹொஸ்பிட்டலில் என்ன செய்தாராம்| என்று அழுதேன்.இதற்கிடையில் தான் டீச்சரும் குடும்ப சகிதம் மட்டக்குளியில் இருப்புது தெரிந்தது. நளீர் நானாவுக்கு இந்த டிசம்பரில் திருமணம் என்று கோல் பண்ணி உம்மாவிடம் சொல்லியிருக்கிறார் டீச்சர்.


உம்மா என்னைப் பார்க்க வந்திருந்த போது டீச்சரைப் பார்க்கச் செல்ல உத்தேசித்திருந்தோம்.

அதனடிப்படையில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் இடம் தேடியலைந்து வீட்டைக் கண்டு பிடித்து போது பெரியதொரு சாதனையை செய்து விட்டது போல இருந்தது.


போதாத குறைக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டீச்சர். அங்கு போய் டீச்சரைப் பார்த்த முதல் வினாடியே மனசை போட்டு பிசைவது போல வலியெடுத்தது. ஏன் வந்தோம் எனறெண்ணினேன். உம்மாவை விட வயது குறைந்த டீச்சர் முகம் வெளுத்து தலை நரைத்து வேறு யாரோ போல் இருந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முதல் டீச்சருக்கு இந்நோய் ஏறபட்டதாம் அதனால் தான் என் திருமணத்துக்கும் வரவில்லை என்ற போது என் முகத்தை வேறெங்காவது கொண்டு போய் வைக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தோன்றியது. நாம் வரும் மகிழ்ச்சியில் தான் இன்று இந்த அளவுக்காவது எழுந்து நடமாடுவதாக சேர் சொன்ன போது ஆனந்தம் பரவினாலும் சமையல்காரியின் உதவியுடன் எமக்காக அனைத்தும் தயாரித்ததை அறிந்த போது துடித்துப் போனேன். செல்லமாக கோபித்தேன்.


உம்மாவும் வெகுவாக கலங்கித்தான் போனார். உம்மாவுக்கும் டீச்சருக்கும் கூல்டிரிங்ஸ் கொடுப்பதற்காக டீச்சரின் அறைக்கு நுழைந்த போது, தாம் இளம் ஆசிரியைகளாக இருந்த போது பாடசாலையின் அபிவிருத்திக்காக பட்ட பாட்டை இருவருமாக கதையளந்து கொண்டிருந்தனர். நானாமாரும் வெளியில் போயிருந்ததால் பெரிய சேர் தான் என் கணவருக்கு பி;ஸ்கட் முதலியவற்றை கொடுத்துக் கொண்டிருந்;தார். நிறைய நேரம் உம்மாவையும் டீச்சரையும் பேச விட்டு நாம் முன் அறையில் இருந்தோம். வீட்டுக்கு வர வேண்டிய நேரம் நெருங்கவே டீச்சருக்கு தெரிவித்து விட்டு கை கால் அசைக்க முடியாமல் படுத்திருக்கும் அவரின் நலனுக்காக ப்ரார்த்தித்தவாறு வெளியே வந்தோம். பெரிய சேரின் கண்கள் கலங்கியதை காணத் தவறவில்லையாயினும் காட்டிக் கொள்ளவில்லை. கேட்டை விட்டு வெளியே வந்த தும் பீறிட்டுப் பாய்ந்த கண்ணீரை கணவருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.